Dj Blackக்கு கல்யாணம், அவர் மணக்கோலத்தில் இருக்கும் வீடியோவை வெளியிட்ட பிரியங்கா- இதோ பாருங்கள்
சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சக்கு தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.
இப்போது ஒளிபரப்பாகும் இந்த சீசன் மூலம் பாடகர்களை தாண்டி ஒருவர் பிரபலம் அடைந்துள்ளார், அவர் வேறுயாரும் இல்லை Dj Black தான்.
பூஜா என்ற போட்டியாளருக்கு அவர் விதவிதமாக பாட்டுகள் போட்டு ரசிகர்கள், சிறப்பு விருந்தினர்கள், போட்டியாளர்கள் என அனைவரையுமே கவர்ந்துவிட்டார்.
அவரின் வேலையை பாராட்டி அண்மையில் விஜய் டெலிவிஷன் விருது விழாவில் Dhool Moment என்ற சிறப்பு விருது கொடுக்கப்பட்டது.
ஸ்பெஷல் வீடியோ
இந்த நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா Dj Blackக்கு கல்யாணம் என ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
Dj Black திருமண கோலத்தில் மணமேடையில் உட்கார்த்துள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே திருமணம் கூடிவிட்டதா அதைதான் அவர் நிகழ்ச்சி மூலம் சொல்ல வருகிறாரா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.