பிரியங்கா பைனலுக்கு வருவாரா இல்லையா? உடல்நிலை பற்றி வந்த புது தகவல்
பிக் பாஸ் 5ம் சீசனில் முக்கிய போட்டியாளர்களின் ஒருவராக இருந்துவரும் பிரியங்கா நேற்று முன்தினம் உடல்நில சரியில்லாத காரணத்தினால் ஷோவில் இருந்து வெளியேறினார். அவர் கன்பெக்ஷன் ரூம் வழியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வது போல காட்டப்பட்டது.
இந்நிலையில் தற்போது பிரியங்கா உடல்நிலை பற்றிய புது தகவல் வெளியாகி இருக்கிறது. பிரியங்கா மீண்டும் வீட்டுக்குள் வந்துவிட்டார் என்றும் அவர் வரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகும் எனவும் செய்தி வந்திருக்கிறது.
இதனால் பிரியங்கா கண்டிப்பாக பைனலில் பங்கேற்பார் என தெரிகிறது. அவர் நினைத்து இருந்தால் ஷோவில் இருந்து கூட சென்றிருக்கலாம், ஆனால் அவர் இந்த நிலையிலும் தொடர்வது பெரிய விஷயம் என அவரது ரசிகர்கள் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.
Priyanka is already inside the house now??#biggbosstamil #Biggbosstamil5 #Priyanka https://t.co/4IFEHyppD0
— Imadh (@MSimath) January 14, 2022