திருமணத்திற்கு பின் சூப்பர் சிங்கர் மேடையில் தொகுப்பாளினி பிரியங்கா.. பிரபல நடிகரிடம் வாங்கிய அடி, புரொமோ
பிரியங்கா
தொகுப்பாளினி பிரியங்கா, யார் என்ன கலாய்த்தாலும் ஜாலியாக எடுத்துக்கொள்வது, வித்தியாசமான சிரிப்பு, ரைமிங், டைமிங் பஞ்ச் என ஒரு மாதிரி நிகழ்ச்சியை ஜாலியாக கொண்டு செல்லக் கூடியவர்.
அதிலும் சூப்பர் சிங்கர் என்றாலே மாகாபா-பிரியங்கா தான் என்ற அளவிற்கு ஆகிவிட்டது. இந்நிகழ்ச்சியில் பாடல்கள் பாடுபவர்களை தாண்டி இவர்கள் அட்ராசிட்டி அதிகமாக இருக்கும்.
பேக் டூ ஷோ
கடந்த ஏப்ரல் 16ம் தேதி இவருக்கும் இலங்கையை சேர்ந்த வசி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் உறவினர்கள் மற்றும் சில நண்பர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
திருமண பிஸியில் இருந்ததால் சூப்பர் சிங்கர் ஒரு எபிசோடை மகாநதி சீரியல் புகழ் லட்சுமி ப்ரியா தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் சூப்பர் சிங்கர் செட்டிற்கு திரும்பியுள்ளார் பிரியங்கா.
இந்த வாரத்திற்கான எபிசோட் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் பிரியங்கா, இயக்குனரும் நடிகருமான சசிகுமாரிடம் ஒரு கொட்டும் வாங்குகிறார். இதோ புரொமோ,