பிரியங்கா அம்மா அவரை பற்றி என்ன சொன்னார் பாருங்க! லேட்டஸ்ட் ப்ரொமோ
விஜய் டிவியில் பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக வந்திருக்கும் தொகுப்பாளரை பிரியங்காவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரண்டுமே சம அளவில் இருந்து வருகிறது. ட்விட்டரில் அவரை திட்டுபவர்கள் ஒரு புறம் மற்றும் அவருக்கு ஆதரவாக பேசுபவர்கள் மறுபுறம் என தொடர்ந்து வாக்குவாதம் நடந்துகொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து சென்றுகொண்டிருக்கின்றனர். இன்று பிரியங்காவின் குடும்பத்தினர் வீட்டுக்குள் வந்திருக்கின்றனர். அம்மாவை பார்த்ததும் பிரியங்கா கதறி அழுது ஓடிச்சென்று கட்டிப்பிடித்து இருக்கிறார். மேலும் பிரியங்காவின் சகோதரரும் உடன் வந்திருக்கிறார். பிரியங்காவின் அம்மாவிடம் பலரும் சென்று ஆசீர்வாதம் பெற்றுக்கொள்கின்றனர்.
"I am Happy for you" என பிரியங்காவின் அம்மா கூறி இருப்பதும் ப்ரொமோவில் வந்திருக்கிறது. அதனால் அவர் ப்ரியங்காவை நினைத்து அதிகம் மகிழ்ச்சியில் தான் இருக்கிறார் என தெரிகிறது.
ப்ரியங்காவுக்கு அவர் என்ன அட்வைஸ் கொடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.
#Day81 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/r3LMAtsG5t
— Vijay Television (@vijaytelevision) December 23, 2021