தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா?
பிரியங்கா தேஷ்பாண்டே
பிரியங்கா தேஷ்பாண்டே, இவரைப் பற்றி மக்களுக்கு சொல்லவே வேண்டாம்.
எப்படி கூகுள் ஒரு பெயரை போட்டதும் அவர்களை பற்றி எல்லா விஷயத்தையும் கூறி விடுகிறதோ, அதேபோல் இவரது பெயரைச் சொன்னால் இவரை பாலோ செய்பவர்கள் அனைவருக்கும் இவரை பற்றிய விஷயங்கள் அனைத்தும் நியாபகம் வந்துவிடும்.

அந்த அளவிற்கு தொகுப்பாளினியாக கலக்கி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். எப்போதும் எல்லோரையும் சிரிக்க வைக்கும் இவர் பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கினார்.
ஒரு பாடல்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் பிரியங்கா தேஷ்பாண்டே அவ்வப்போது சில பாடல்கள் பாடி தனது பாடல் திறமையை காட்டியுள்ளார். Whos The Hero, வெயிலோடு விளையாடி போன்ற பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.

தற்போது அவர் சினிமாவில் பாடியுள்ள ஒரே ஒரு பாடல் குறித்த தகவல் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு வெளியான தேவராட்டம் படத்தின் மூலம் தான் பாடகியாக அறிமுகமாகி இருக்கிறர்.
அப்படத்தில் இடம்பெற்ற மதுர பளபளக்குது என்கிற பாடலை நிவாஸ் கே பிரசன்னா, விஜய் சேதுபதி மற்றும் நிரஞ்சனா ரமணன் ஆகியோருடன் சேர்ந்து பிரியங்கா தேஷ்பாண்டேவும் பாடி இருக்கிறாராம்.

அந்த பாடலும் மக்களிடம் சூப்பர் டூப்பர் ஹிட்டான பாடல் தான். ஆனால் இந்த பாடலுக்கு பிறகு பிரியங்கா தேஷ்பாண்டே எந்த படத்திலும் பாடவில்லை.
திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu