தனது உடைந்த காலுடன் நண்பருக்காக பிரியங்கா தேஷ்பாண்டே செய்த வேலை... இதுதான்பா நட்பு
பிரியங்கா தேஷ்பாண்டே
பிரியங்கா தேஷ்பாண்டே என்றதும் தமிழ் சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளினி என்பது உடனே தோன்றும்.
அந்த அளவிற்கு சின்னத்திரையில் வெற்றிகரமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதை வென்றுவிட்டார். இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஸ்டார்ட் மியூசிக், ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா என 2 நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
விரைவில் தொடங்கப்போகும் சூப்பர் சிங்கரை சீனியர்களுக்கான நிகழ்ச்சியை அவர் தான் தொகுத்து வழங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நண்பன்
பிஸியாக தொகுப்பாளர் வேலையை செய்துவரும் பிரியங்காவிற்கு சில வாரங்களுக்கு முன் காலில் Fracture ஏற்பட்டுள்ளது, அந்த காலுடனே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
உடைந்த தனது காலுடனே தனது நண்பனின் பன் பட்டர் ஜாம் படத்தை காண வந்துள்ளார் பிரியங்கா. பிக்பாஸ் 5ல் சீசனில் கலந்துகொண்ட போது ராஜு மற்றும் பிரியங்கா நல்ல நட்பாக பழகியுள்ளனர்.
நண்பனின் முதல் படம் ரிலீஸ் ஆகவே கால் பிரச்சனை கூட பார்க்காமல் தியேட்டர் வந்து படம் பார்த்துள்ளார். பிரியங்காவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது, நட்புக்கு உதாரணம் என கமெண்ட்டுகள் குவிகின்றன.