திருமணத்திற்கு பின் எப்படி இருக்கு.. பிரியங்கா தேஷ்பாண்டே என்ன கூறியுள்ளார் பாருங்க
பிரியங்கா தேஷ்பாண்டே
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த சின்னத்திரை பிரபலங்களில் ஒருவர். இவர் திருமணம் கடந்த வாரம் நடைபெற்றது.
தனது நீண்ட நாள் காதலரான வசி என்பவரை திருமணம் செய்துகொண்டார். பிரியங்கா - வசி திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த திருமணத்தில் அமீர், பாவனி, நிரூப், மதுமிதா, அசார் ஆகிய விஜய் டிவி நட்சத்திரங்கள் பங்கேற்றனர். பிரியங்காவின் திருமண புகைப்படங்கள் வெளிவந்து வைரலானது.
திருமணத்திற்கு பின்
இந்த நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் திருமணத்திற்கு பின் எப்படி இருக்கிறது என பிரியங்கவிடன் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பிரியங்கா "திருமணத்திற்கு பின் Feeling நல்லா இருக்கு, ஜாலியா இருக்கு, ரொம்ப நல்லா இருக்கு". அதன்பின் அமீர் பாவனி குறித்து பேசிய பிரியங்கா, திருமண தம்பதி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கூறினார். "சிறந்ததிலும் சிறந்ததாக இருக்க வேண்டும். முதலில் நண்பர்களாக இருக்க வேண்டும். அந்த ரிலேஷன்ஷிப்பில் நட்பு இருந்தால் அது ஒரு அழகான காதலாக மாறிவிடும்" என கூறியுள்ளார்.

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
