பிரியங்காவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ! பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன் நடந்த விஷயம்..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5 ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று நிறைவடைந்தது.
இதில் அதிக வாக்குகள் பெற்று ராஜு பிக் பாஸ் டைட்டிலை தட்டி சென்றார், அவரை தொடர்ந்து பிரியங்கா அதிக வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பெற்றார்.
இந்நிலையில் பிக் பாஸில் இரண்டாம் பிடித்து வெளியே வந்துள்ள பிரியங்கா தனது யூடியூப் சேனலின் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது "இந்த நிகழ்ச்சிக்கு போனதே ஒரு சவாலான விஷயம் தான். போவதற்கு முன்பு பலரும் வேண்டாம் என்றார்கள். இருந்தாலும் நான் இதில் கலந்து கொள்ள வேண்டும் பிரியங்கா எப்படி என்பதை மக்களுக்கு காட்ட வேண்டும் என்று நினைத்தேன்.
அந்த ஆசை தற்போது நிறைவேறியுள்ளது, இப்பொது எனக்கு கிடைத்திருக்கும் வெற்றி உங்களால் கிடைத்தது" என தெரிவித்துள்ளார் பிரியங்கா.
சர்ச்சைகளுக்கு நடுவில் விஜய் - த்ரிஷா ஜோடியாக அஜித்தின் கார் பந்தயத்தில் : வைரலாகும் புகைப்படங்கள் Manithan
கடலில் 2 நாட்களாக தத்தளித்த 15 வயது சிறுவன்: கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்த சம்பவம் News Lankasri