பிக் பாஸ் சீசன் 5-க்கு முன்பே பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள பிரியங்கா.. எப்போது தெரியுமா
பிக் பாஸ் சீசன் 5 சமீபத்தில் துவங்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
இந்த பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில், விஜய் தொலைக்காட்சியை சேர்ந்த, தொகுப்பாளினி பிரியங்கா 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார்.
தொகுப்பாளினி பிரியங்கா விஜய் டிவியில் ஒளிபரப்பான ஸ்டார்ட் ம்யூசிக், சூப்பர் சிங்கர், காமெடி ராஜா கலக்கல் ராணி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5-க்கு முன்பே, பிரியங்கா பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
ஆம், பிக் பாஸ் சீசன் 3, எபிசோட் 103ல் கெஸ்டாக வீட்டிற்குள் பிரியங்கா சென்றுள்ளார்.
அப்போது பிரியங்காவுடன் இணைந்து, தாடி பாலாஜி, மாகாபா ஆனந்த், ரக்ஷன் மற்றும் ரியோ என ஐந்து நபர்கள் பிக் பாஸ் 3 வீட்டிற்குள் கெஸ்டாக சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.