பிக் பாஸ் சீசன் 5ல் தொகுப்பாளினி பிரியங்கா வருவது உறுதி.. வெளியான சூப்பர் தகவல்
பிக் பாஸ் சீசன் 5 விரைவில் துவங்கவிருக்கிறது. வழக்கம் போல் இந்த 5வது சீசனையும், கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.
ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 5 குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துவிட்டது. தொடர்ந்து ப்ரோமோகளும் வெளிவந்துகொண்டு இருக்கிறது.
மேலும் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்களின் பெயர்களும் இணைந்து கசிந்து வருகிறது.
அந்த பட்டியலில் விஜய் டிவியை சேர்ந்த தொகுப்பாளினி பிரியங்காவின் பெயரும் கூறப்பட்டு வகிறது.
இந்நிலையில் பிக் பாஸ் 5ல் பிரியங்கா போட்டியாளராக செல்வது உறுதி என தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், பிக் பாஸ் 5ல் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் தற்போது சென்னையில் உள்ள ITC ஹோட்டலில் தனிமைபடுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் பிரியங்காவும் தனிப்படுத்தப்பட்டுள்ளார் என்று தகவல் கூறப்படுகிறது.