பிக்பாஸ் 5வது சீசனில் கண்டிப்பாக தொகுப்பாளினி பிரியங்கா செல்கிறார்- ஆதாரமாக வெளியான ஒரு புகைப்படம் இதோ
தொகுப்பாளினி பிரியங்கா இவர் பெயரை சொன்னாலே முதலில் நியாபகம் வருவது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சி அவருக்கு தொகுப்பாளினியாக வளர பெரிய வாய்ப்பாக இருந்தது.
தொடர்ந்து இந்த பாடல் நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் மாகாபா இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே பிரியங்கா பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொள்ள போகிறார் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
ஆனால் நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்தாலே யார் யார் வருகிறார்கள் என்பது தெரியும்.
இப்போது என்ன விஷயம் என்றால் பிரியங்கா தொகுத்து வழங்கிய ஹிட் ஷோவான Start Music 3வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த ஷோவை தற்போது புதிதாக பிரியங்காவிற்கு பதிலாக மாகாபா தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாக ரசிகர்கள் உடனே அப்போ கண்டிப்பாக பிரியங்கா பிக்பாஸ் 5வது சீசனிற்கு செல்கிறார் என கமெண்ட் செய்கின்றனர்.
Start Music 3வது சீசனின் முதல் போட்டியாளர்களாக பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்கள் வந்துள்ளனர்.