யாரை இப்படி சொல்கிறார் பிரியங்கா? பிக் பாஸ் வீட்டில் கிடைத்த பெரிய பாடம்!
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு தற்போது டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் தற்போது சிபி மற்றும் அமீர் ஆகியோர் தான் இருக்கின்றனர். அவர்கள் இடையே போட்டி நடப்பது இன்றைய முதல் ப்ரொமோவில் காட்டப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது இரண்டாம் ப்ரொமோவில் பிரியங்கா பேசி இருக்கிறார். அவர் இந்த வீட்டில் தனக்கு கிடைத்த பாடம் என்ன என்பது பற்றி பேசி இருக்கிறார்.
"நான் ஒரு எமோஷ்னல் நபர் என்பது எனக்கு முதலில் இருந்தே தெரியும் என்றாலும், ஒரு விஷயம் உன்னுடையதாக இருந்தால் அது கண்டிப்பாக உன்னிடம் தான் இருக்கும். அது உன்னுடையது இல்லை என்றால் அதை அப்படியே விட்டுவிட வேண்டும். அது மீண்டும் உங்களிடம் வந்தால் அது உங்களுடையது. வரவில்லை என்றால் அது என்னைக்குமே உன்னுடையது இல்லை."
"இந்த ஒரு விஷயம் தான் நான் பிக் பாஸ் வீட்டில் கற்றுக்கொண்ட பாடம் என நினைக்கிறேன்" என பிரியங்கா குறிப்பிட்டு இருக்கிறார்.
யாரை பற்றி இப்படி சொல்கிறார் அவர்?