தொகுப்பாளினி பிரியங்கா மற்றும் மணிமேகலை யூடியூப் மூலம் இத்தனை லட்சம் சம்பாதித்துள்ளார்களா?
விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் பலர் சமீபத்தில் புதிய கார் வாங்கினார்கள். பாலாஜி, மணிமேகலை எல்லாம் BMW கார் வாங்கி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள்.
இப்போது இந்த தொலைக்காட்சியில் பணிபுரியும் பலர் யூடியூப் பக்கங்கள் வைத்துக்கொண்டு நிறைய வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
அவர்கள் பதிவு செய்யும் வீடியோக்களுக்கு நிறைய பார்வையாளர்களும் உள்ளனர்.
தற்போது அந்த யூடியூப் பக்கம் மூலம் பிரியங்கா மற்றும் மணிமேகலை சம்பாதிக்கும் விவரம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது பிரியங்கா மருத்துவமனையில் இருந்து ஒரு வீடியோ பதிவிட்டார், அதன் மூலம் மட்டும் ரூ. 7 லட்சம் சம்பாதித்துள்ளாராம்.
அதேபோல் மணிமேகலை ஒரு மாதத்தில் ரூ. 6 லட்சம் வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.