இது என்னுடைய நீண்ட நாள் ஆசை.. அரசன் படம் குறித்து மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா மோகன்
Priyanka mohan about arasan movie & vetrimaran: அரசன் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை பிரியங்கா மோகன், அப்படத்தில் பணிபுரிவது குறித்தும், இயக்குநர் வெற்றிமாறன் குறித்தும் கூறியிருப்பது இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகை பிரியங்கா மோகன்
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரியங்கா மோகன். இவர் நடிப்பில் அடுத்ததாக அரசன், துலாபாரம், கவின் 09, AGS 29 மற்றும் மஞ்சணத்தி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக பிரியங்கா மோகன் நடித்து வரும் திரைப்படம்தான் அரசன்.

சிம்பு, விஜய் சேதுபதி, யோகலக்ஷ்மி, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை தயாரிக்கிறார். சமீபத்தில் தீபாவளி ஸ்பெஷலாக இப்படத்திலிருந்து கிலிம்ப்ஸ் வீடியோ வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
மனம் திறந்து பேசும் பிரியங்கா மோகன்
இந்நிலையில், அரசன் திரைப்படம் மற்றும் அப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் குறித்து நடிகை பிரியங்கா மோகன் மனம் திறந்து பேசியுள்ளார்.

"வெற்றிமாறன் சாரின் படங்களை நான் எப்போதும் ரசித்து பார்ப்பேன். அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. குறிப்பாக, வடசென்னை திரைப்படத்தின் மிகப்பெரிய ரசிகை நான். அரசன் திரைப்படம் வடசென்னை படத்தின் அதே கதையுலகில், அதற்கு இணையான நடைபெறும் கதையாக உருவாகிறது. நான் பெங்களூருவை சேர்ந்தவள் என்பதால் ஆரம்பத்தில் வடசென்னை வட்டார மொழியில் பேசுவது சற்று சவாலாக இருந்தது. இருப்பினும் விரைவாக பழகிக்கொண்டேன். தற்போது படப்பிடிப்பை மிகவும் ரசித்து நடித்து வருகிறேன்" என்று கூறியுள்ளார்.