சென்சேஷன் நடிகை பிரியங்கா மோகன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. விவரத்துடன் இதோ
நடிகை பிரியங்கா மோகன்
தெலுங்கில் வெளிவந்த கேங் லீடர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இதன்பின் தமிழில் என்ட்ரி கொடுத்த பிரியங்கா, சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தில் நடித்திருந்தார். அறிமுக படமும் இவருக்கு தமிழில் வெற்றியாக அமைந்தது.
இப்படத்தை தொடர்ந்து சூர்யாவுடன் கைகோர்த்து எதற்கும் துணிந்தவன் படத்தில் கதாநாயகியாக நடித்து மக்களை கவர்ந்தார். அடுத்ததாக சமீபத்தில் வெளிவந்த சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து தற்போது தமிழ் திரையுலகின் சென்சேஷன் நடிகையாகியுள்ளார்.
இதுமட்டுமின்றி, விரைவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவர் 169 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரியங்கா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.
வாங்கும் சம்பளம்
இந்நிலையில், நடிகை பிரியங்கா மோகன் கடைசியாக நடித்து வெளிவந்த டான் திரைப்படத்திற்காக ரூ. 50 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளாராம். இதன்முலம், இவர் ஒரு படத்திற்கு ரூ. 50 லட்சம் சம்பளமாக வாங்கி வருகிறார் என்று தெரியவந்துள்ளது.

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan
