சமந்தா, தமன்னாவை தொடர்ந்து ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் பிரியங்கா மோகன்.. அதுவும் முன்னணி நடிகரின் படத்தில்
புஷ்பா படத்தில் சமந்தா ஊ சொல்றியா மாமா என்கிற பாடலுக்கு நடனமாடி இருந்தார். அப்படத்தின் வெற்றிக்கு சமந்தாவின் நடனமும் முக்கிய காரணமாக அமைந்தது.

இதை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் தமன்னா, காவாலா பாடலுக்கு நடமாடி அப்படத்தின் வெற்றிக்கு உதவியிருந்தார். மேலும் பாலிவுட் படங்களிலும் தொடர்ந்து ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி வருகிறார்.

பிரியங்கா மோகன்
இந்த நிலையில் தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் பிரபல நடிகை பிரியங்கா மோகன் ஒரே ஒரு பாடலுக்கு நடமாடியுள்ளார் என அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

'NEEK'
இதுகுறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளிவரவுள்ளது" என கூறியுள்ளார். மேலும் வெளியிட்டுள்ள போஸ்டரில் "பிரியங்கா மோகனின் கேமியோவிற்கு நன்றி" என தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் பிரியங்கா மோகன் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#NEEK first single golden sparrow : coming soon. @gvprakash @theSreyas @wunderbarfilms pic.twitter.com/hCpdlQhopV
— Dhanush (@dhanushkraja) August 25, 2024
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri