தமிழ் சினிமாவின் சூப்பர் ஹீரோயின் பிரியங்கா மோகன் சொத்து மதிப்பு.. இவ்வளவா?
பிரியங்கா மோகன்
தெலுங்கு சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரியங்கா மோகன். அமைதியான முக பாவணை, அழகான தோற்றம் ஆகியவற்றின் காரணமாக தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக டாக்டர், சூர்யா ஜோடியாக எதற்கும் துணிந்தவன் என பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.

இவ்வளவா?
இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ஒரு படத்திற்கு ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரையில் சம்பளம் பெற்று வரும் பிரியங்காவின் நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.8 கோடி முதல் ரூ.10 கோடி வரை உள்ளது என்று கூறப்படுகிறது.
இவரிடம் ரூ.45 லட்சம் மதிப்புள்ள ஆடி க்யூ 3 கார் ஒன்றும், ரூ.28 லட்சம் மதிப்பு கொண்ட டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா கார் ஒன்றும் இருப்பதாக கூறப்படுகிறது.
