படுதோல்விக்கு பின் பிரியங்கா மோகன் எடுத்த அதிரடி முடிவு.. வெற்றி இயக்குநருடன் இணையும் நடிகை
பிரியங்கா மோகன்
நடிகை பிரியங்கா மோகன் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்த சரிபோதா சனிவாரம் படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. ஆனால், தமிழில் வெளியான பிரதர் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.
வெப் சீரிஸ்
இந்த நிலையில், தமிழில் கடைசியாக பிரியங்கா மோகன் நடித்த படம் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், அடுத்ததாக வெப் சீரிஸில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
நித்தம் ஒரு வானம் படத்தை இயக்கிய இயக்குநர் இரா. கார்த்திக் இயக்கத்தில் வெப் சீரிஸ் ஒன்று உருவாகி வருகிறது.
நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த வெப் சீரிஸை தயாரித்து வருகிறார்கள். பிரியங்கா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு தற்போது கொரியாவில் நடைபெற்று வருகிறதாம்.
ஆனால் இந்த வெப் சீரிஸில் வேறு யார்யாரெல்லாம் பணிபுரிகிறார்கள் என்பது குறித்து தகவல் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இருக்கிறார்கள் அங்கே... இந்தியாவில் 35 ஆண்டுகளாக வசிக்கும் பாகிஸ்தானிய பெண்மணி உருக்கம் News Lankasri
