ரஜினிகாந்த் படத்தை நிராகரித்த பிரியங்கா மோகன்.. காரணம் இந்த கிசுகிசு தானாம்
பிரியங்கா மோகன்
டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இதன்பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் மற்றும் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
அடுத்ததாக ஜெயம் ரவியின் 30வது படத்தில் நடித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன் ரஜினியின் ஜெயிலர் படத்தில் பிரியங்கா மோகன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.
ரஜினி பட வாய்ப்பு
அதன்படி, பிரியங்கா மோகனை இப்படத்தில் நடிக்கவைக்க ஜெயிலர் படக்குழுவும் அணுகியுள்ளார்களாம். ஆனால், ஜெயிலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பிரியங்கா மோகன் நிகராகரித்துவிட்டாராம். இதற்க்கு காரணம் இயக்குனர் நெல்சன் தான் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே டாக்டர் திரைப்படத்தில் நெல்சன் இயக்கத்தில் பிரியங்கா மோகன் நடித்திருந்தார். அப்போது இருவரையும் வைத்து சில கிசுகிசுக்கள் எழுந்ததாம். இதனால் தான் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் நடிக்க வேண்டாம் என்று பிரியங்கா மோகன் முடிவு செய்துள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

இரவு முழுவதும் அவர்களை மகிழ்விக்கவே... - அழகிப்போட்டியில் இருந்து வெளியேறிய பெண் குற்றச்சாட்டு IBC Tamilnadu
