ராகவா லாரன்ஸ் ஜோடியாக இணைந்த முன்னணி பிரபல நடிகை.. வெளியான புது அப்டேட்

Bhavya
in திரைப்படம்Report this article
நடிகர் ராகவா லாரன்ஸ்
தமிழ் சினிமாவில் நடிப்பு, நடனம், இயக்கம் என பல துறைகளில் ஜொலித்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ்.
இவர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
அதை தொடர்ந்து, ராகவா லாரன்ஸ் 'ரெமோ', 'சுல்தான்' போன்ற வெற்றி பெற்ற படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் 'பென்ஸ்' என்ற படத்தில் நடிக்கிறார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது.

படத்தை என்ஜாய் பண்ணி மட்டும் பாருங்கள் வேறு எது பற்றியும் பேசாதீர்கள்.. அதிரடியாக கூறிய நடிகர் சூர்யா
வெளியான புது அப்டேட்
இந்த படத்தை லோகேஷ் கனகராஜின் 'ஜி ஸ்குவாட்' நிறுவனம் மற்றும் ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில், தற்போது ராகவா லாரன்ஸ் ஜோடியாக 'பென்ஸ்' படத்தில் நடிக்க நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.
மேலும், இந்த படம் தொடர்பான அப்டேட் விரைவில் வெளி வரும் என எதிர்பாக்கப்படுகிறது.