பெண்கள் மீது அந்த மாதிரியான அத்துமீறல்!! நடிகை பிரியங்கா மோகன் வேதனை
கேப்டன் மில்லர்
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வருகிற 12-ம் தேதி வெளியாகவுள்ளது. நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதியிடம் ஒரு வாலிபர் அத்துமீறிவிட்டார். அப்போது உடனே அவரை அந்த நபரை பிடித்து ஐஸ்வர்யா தர்ம அடி கொடுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரியங்கா மோகன்
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பிரியங்கா மோகன், "ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமான பாதுகாப்பு இருக்க வேண்டும். எல்லாரையும் மதிக்க வேண்டும். நமது வீட்டிலும் அம்மா, சகோதரிகள் உள்ளனர், அவர்களுக்கு மட்டும் ஏதாவது நடந்தால் சும்மா இருப்போமோ? ஆனால் நம்ப வேறொரு பெண்ணுக்கு தப்பான விஷயத்தை செய்யலாமா?" என்று பிரியங்கா மோகன் கூறியுள்ளார்.