சூப்பர் ஸ்டார் நடிகருக்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன்.. முதல் முறையாக இணையும் ஜோடி
இளம் நடிகை பிரியங்கா
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன்.
இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இதன்பின், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 169 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை.
மகேஷ் பாபு - பிரியங்கா மோகன்
இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார், நடிகர் மகேஷ் பாபு நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா மோகன் கமிட்டாகியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் படக்குழுவிடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan
"கரூர் நிகழ்ச்சி குறித்து அமீர் கேள்வி: '41 பேரை இழந்த குடும்பத்தினர் கைதட்டி மகிழ்ந்தார்களா?' – பதிவு வைரல்" IBC Tamilnadu