போனது போனது தான்.. கணவரை பிரிந்த நடிகை பிரியங்கா நல்காரி உருக்கமாக போட்ட வீடியோ
சன் டிவியின் ரோஜா தொடரில் ஹீரோயினாக நடித்து பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தவர் பிரியங்கா நல்காரி. அவருக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
அவர் தற்போது ஜீ தமிழின் நள தமயந்தி என்ற சீரியலில் நடித்து வருகிறார். அவர் கடந்த வருடம் மார்ச் 23ம் தேதி அவரது காதலர் ராகுல் வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். மலேசியாவில் நடந்த அவர்கள் திருமணத்தில் குடும்பத்தினர் யாருமே கலந்துகொள்ளவில்லை.
பெற்றோருக்கு பாஸ்போர்ட் பிரச்சனை என சொல்லி சமாளித்தார் பிரியங்கா. அதன் பிறகு சில மாதங்களிலேயே பிரியங்கா நல்காரி தனது கணவரை பிரிந்துவிட்டார். அதற்கான காரணத்தை வெளிப்படையாக அவர் அறிவிக்கவில்லை என்றாலும் மாப்பிள்ளை வீட்டில் அவரை ஏற்றுக்கொள்ளாதது தான் பிரிவுக்கு காரணம் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
முதல் மனைவியுடன் விவாகரத்து.. 15 வயதில் ஒரு மகள்..! இரண்டாவது மனைவியாகும் வரலக்ஷ்மி சரத்குமார், ஷாக்கிங் தகவல்
போனது போனது தான்..
இந்நிலையில் பிரியங்கா நல்காரி உருக்கமாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். போனது போனது தான் என ஒரு விஷயத்தை அவர் கூறி இருக்கிறார்.
"போனதை பத்தி யோசிக்காதீங்க.. போனது போனது தான். அதை பற்றி நினைக்காதீங்க. அடுத்து என்னனு யோசிங்க. Present தான் முக்கியம். அதை மட்டும் என்ஜாய் பண்ணுங்க" என அவர் கூறி இருக்கிறார்.