சூப்பர் ஹிட் சீரியலில் மீண்டும் நடிக்க வந்த ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா.. வெளிவந்த புரோமோ

By Karthick Raja May 17, 2026 03:45 AM GMT
Report

ரோஜா சீரியல் பிரியங்கா 

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். 2018ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் 2022ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக ஓடியது. 1,300-க்கும் மேல் எபிசோட்களை இந்த சீரியல் கடந்துள்ளது. சின்னத்திரை வரலாற்றில் அதிக ஆண்டுகள் ஒளிபரப்பான சீரியலில் ரோஜா சீரியலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஹிட் சீரியலில் மீண்டும் நடிக்க வந்த ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா.. வெளிவந்த புரோமோ | Priyanka Nalkari In Gowri Serial New Entry

கையை அறுத்துக்கொண்டேன் என ரவி மோகன் பரபரப்பு பேட்டி... திடீரென ஆர்த்தி செய்த காரியம்

கையை அறுத்துக்கொண்டேன் என ரவி மோகன் பரபரப்பு பேட்டி... திடீரென ஆர்த்தி செய்த காரியம்

இந்த சீரியலில் ரோஜா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை பிரியங்கா நல்காரி. இவர் ரோஜா சீரியலின் வெற்றியை தொடர்ந்து சீதா ராமன், நளதமயந்தி ஆகிய சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

கௌரி சீரியலில் பிரியங்கா

இதன்பின் சின்னத்திரையில் தலைகாட்டாமல் இருந்து வந்த பிரியங்கா தற்போது சூப்பர்ஹிட் சீரியலில் கம்பேக் கொடுத்துள்ளார். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் கௌரி. கடந்த 2024ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

சூப்பர் ஹிட் சீரியலில் மீண்டும் நடிக்க வந்த ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா.. வெளிவந்த புரோமோ | Priyanka Nalkari In Gowri Serial New Entry

இந்த நிலையில், கௌரி சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதற்கான புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இவருடைய வரவு கௌரி சீரியலில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US