புதிய ரெஸ்டாரன்ட் திறந்துள்ள சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி- அவரே வெளியிட்ட புகைப்படங்கள்
பிரியங்கா நல்காரி
தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் மூலம் மக்களிடம் பிரபலம் ஆனவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை பிரியங்கா நல்காரி.
சன் தொலைக்காட்சியில் டிஆர்பியில் டாப்பில் இருந்த ரோஜா தொடரில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழில் மிகவும் பிரபலமான நடிகையானார்.
தெலுங்கிலும் சீரியல்கள் நடிக்கும் இவர் தற்போது ஜீ தமிழில் நள தமயந்தி என்ற தொடரில் நடித்து வருகிறார்.
இதற்கு முன் ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் கமிட்டாகி நடித்து வந்தவர் சில காரணங்களால் தொடரில் இருந்து வெளியேறியிருந்தார்.
புதிய ஆரம்பம்
இந்த நிலையில் சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி தனது கணவருடன் இணைந்து புதிய விஷயத்தை தொடங்கியுள்ளார்.
அதாவது அவர் புதிய ரெஸ்டாரன்ட் ஒன்றை ஆரம்பித்துள்ளார், அதற்கு அண்மையில் பூஜையும் போட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவர் வெளியிட, ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
