சீதா ராமன் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை பிரியங்கா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரியங்கா நல்காரி
சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. ரோஜா சீரியலில் நடித்து தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ரோஜா சீரியல் முடிவுக்கு வந்தது. இதன்பின் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக துவங்கிய சீதா ராமன் சீரியலில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார்.
மக்கள் மத்தியில் சீதா ராமன் சீரியலில் நல்ல வரவேற்பை பெற நடிகை பிரியங்காவும் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
வெளியேறிய நடிகை
இந்நிலையில், திடீரென சீதா ராமன் சீரியலில் இருந்து பிரியங்கா வெளியேறியுள்ளார் எனும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அவருடைய ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். நடிகை பிரியங்கா சமீபத்தில் தான் தன்னுடைய நீண்ட நாள் காதலர் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மைனா நந்தினி ஸ்கின் டோன் மாறியது எப்படி.. இதை தான் செய்தாரா