மணிமேகலை பிரச்சனைக்கு பிறகு பிரியங்கா வெளியிட்ட அதிரடி பதிவு.. வைரலாகும் புகைப்படம்
பிரியங்கா
விஜய் டிவி சேனலில் தொகுப்பாளராக இருந்து தற்போது பிரபல நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் பலர். சந்தானம், யோகி பாபு, சிவகார்த்திகேயன், கோபிநாத், திவ்ய தர்ஷினி என பலர் தற்போது உயர்ந்து இருக்கிறார்கள்.
அந்த வரிசையில் வந்தவர் தான் பிரியங்கா. விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளராக மக்கள் மனதில் இடம் பெற்றார்.
கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர் என இவர் தொகுத்து வழங்காத நிகழ்ச்சியே இல்லை அந்த அளவிற்கு நகைச்சுவைத்தனமான பேச்சால் நிகழ்ச்சியை போர் அடிக்க வைக்காமல் நகர்த்தி கொண்டு செல்வார்.
சமீபத்தில், இவருக்கும் விஜய் டிவியின் மற்றொரு பிரபல தொகுப்பாளராக இருந்த மணிமேகலை என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை அனைவரும் அறிந்த ஒன்றே.
அதிரடி பதிவு
இந்நிலையில், பிரியங்கா அவரது இன்ஸ்டா பக்கத்தில் கழுகு இறக்கைகளுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அதற்கு கீழ், "நான் என் வாழ்வில் கண்ட காயங்கள் எல்லாம் தற்போது மறைந்து விட்டது, என் வளர்ச்சிக்கு ஒவ்வொரு கண்ணீர் துளியும் உதவியது. நான் எழுவது எனக்காக மட்டுமில்லை. என் கனவுகளை நோக்கி, ஒளியை நோக்கி செல்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
