விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க?
பிரியங்கா
தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக வலம்வரும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.
எப்போதும் சிரித்துக்கொண்டு அவர் இருக்கும் இடம் கலகலப்பாகவே இருக்கும். தற்போது சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா என 3 நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வருகிறார்.
திருமண பரிசு
இந்த வாரம் ஒளிபரப்பாக போகும் ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா நிகழ்ச்சியின் புரொமோ வெளியானது. இந்த வாரம் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு ஒரு வெயிட் மிஷின் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதில் கால் வைத்து நிற்கும்போது கரண்ட் எர்த் ஆகிறது, இதனால் அதில் நின்றவர்கள் அனைவரும் பதறிப்போனார்கள்.
இதில் சிறப்பு விருந்தினராக வந்த அறந்தாங்கி நிஷா, பிரியங்கா, மாகாபா என அனைவருமே அதில் நிற்கிறார்கள், மிஷினில் ஏறி நின்று வலியால் துடிக்கிறார்கள்.
கடைசியாக அறந்தாங்கி நிஷா பிரியங்காவிடம் உன்னுடைய கல்யாணத்திற்கு விஜய் டிவி சார்பாக இந்த மெஷின் தருகிறோம் கொண்டு போ என்று சொல்ல, பிரியங்காவும் அதை வாங்கி வைத்துவிட்டு இதை என்னுடைய புருஷன் வசிக்கு கொடுக்கப் போறேன் என்று சொல்ல அங்கு இருந்த எல்லோரும் சிரிக்கிறார்கள்.