வடிவேலு சுந்தர் சி பிரிந்ததற்கு இந்த படம் தான் முக்கிய காரணமாம்- இப்படி ஒரு சண்டையா?
வடிவேலு
வடிவேலு தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த காமெடி நடிகர்.
பிறகு இவரின் அரசியல் நிலைப்பாடு, விஜயகாந்துடன் சண்டை என பல சர்ச்சைகளில் சிக்கி சினிமாவிலிருந்து விலகியே இருந்தார்.
பல வருடம் கழித்து மாமன்னன் படம் வடிவேலுவிற்கு மிகப்பெரும் திருப்பத்தை தந்தது, அதிலும் அவரின் குணச்சித்திர கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
சண்டைக்கு காரணம்
இந்நிலையில் வடிவேலு இந்த உச்சத்தில் இருக்க, இயக்குனர் சுந்தர் சி ஒரு முக்கிய காரணம், அவர் இயக்கிய வின்னர், கிரி போன்ற படங்கள் தான் வடிவேலு மார்க்கெட்டை உயர்த்தியது.
ஆனால், இரண்டு படத்துக்கு பிறகு நகரம் படத்தில் மட்டுமே சில வருடம் கழித்து இணைந்தனர், அதன் பின் எந்த படத்திலும் இணையவில்லை.
இதற்கு முக்கிய காரணம் இரண்டு படத்தில் வடிவேலுவிற்கு தெரியாமலேயே சந்தானம் சம்மந்தப்பட்ட காட்சிகளை சுந்தர் சி எடுத்து விட்டார், அதனால் தான் வடிவேலுவிற்கு கோபம் என்று சிலர் கூறி வருகின்றன்ர்.
இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், சுந்தர் சி வடிவேலு கூட்டணி பிரிந்தது எல்லோரும் அறிந்ததே.

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
