விஜய்யின் பீஸ்ட் படத்தை தடை செய்ய கோரிக்கை- புகார் கொடுத்தது யார் தெரியுமா?
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றவாரு பிரபலமாக ஓடுகிறது.
கதையை தாண்டி தளபதி விஜய் என்ற பெயருக்காகவே படம் எல்லா இடங்களிலும் மாஸாக ஓடுகிறது,
உலகம் முழுவதும் இரண்டு நாள் முடிவில் படம் ரூ. 100 கோடி வரை வசூலித்துவிட்டது, சென்னையில் மட்டுமே ரூ. 3 கோடிக்கு மேலாக வசூலித்து வருகிறது.
ஒவ்வொரு இடங்களிலும் 2 நாள் முடிவில் படம் எவ்வளவு வசூலிக்கிறது என்ற விவரம் வெளியாகி வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
இஸ்லாமிய சமுதாயத்தை சிறுமைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள பீஸ்ட் திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ கடிதம் எழுதியுள்ளார்.