இலங்கையில் விஜய்யின் லியோ படம் ரிலீஸ் ஆகாதா?- பரபரப்பான தகவல்
விஜய்யின் லியோ
கடந்த சில வருடங்களாகவே விஜய்யின் படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றாலே பிரச்சனைகள் அதிகம் வருகிறது.
அப்படி இன்று மற்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணி ஷோவே ரிலிஸ் ஆகியுள்ள விஜய்யின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கே நிறைய பிரச்சனைகளை சந்தித்தது.
திருப்பதி, கேரளா என அந்தந்த மாநிலங்களில் முதல் ஷோ தொடங்கி வெற்றிகரமாக ஒடுகிறது, முதல் பாதி படம் எப்படி இருக்கிறது என்ற விமர்சனமும் வெளிவந்துள்ளது.

இலங்கையில் லியோ
நாளை இலங்கையில் வெளியாகவுள்ள விஜய்யின் லியோ திரைப்படத்தை அங்கு திரையிட வேண்டாம் என நடிகருக்கு ஒரு கடிதம் வந்துள்ளதாம்.
இலங்கை தமிழ் அரசியல் கட்சி தலைவர் விஜய்க்கு எழுதியுள்ள கடிதத்தில், படத்தை காண இளைஞர்கள் சென்றால் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டம் பின்னடையை சந்திக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri