என்னது புஷ்பா 3-யா..? எதிர்பாராத விஷயத்தை கூறிய தயாரிப்பாளர்! மகிழ்ச்சியில் அல்லு அர்ஜுன் ரசிகர்கள்
புஷ்பா
கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்து இந்திய சினிமாவை புரட்டிப்போட்ட திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
இப்படத்தில் அல்லு அர்ஜுடன் இணைந்து பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் நடிகை சமந்தா ஆடிய நடனம் பெரிதளவில் பேசப்பட்டது. இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் அமைந்தது.

முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்திற்காக லீட் இருந்தது. இந்த ஆண்டு இடையிலேயே புஷ்பா 2 வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ரிலீஸ் ஆகவில்லை. இறுதியாக வருகிற டிசம்பர் மாதம் 5ஆம் தேதி புஷ்பா இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது என அறிவித்துள்ளனர்.

புஷ்பா 3-யா?
இந்த நிலையில் இரண்டாம் பாகமே இன்னும் வெளிவராத நிலையில், புஷ்பா படத்தின் மூன்றாம் பாகம் குறித்து தகவலை தயாரிப்பாளர் கொடுத்துள்ளார்.

அதன்படி, புஷ்பா 2 படத்தின் இறுதியில் புஷ்பா 3 படத்திற்காக லீட் இருக்கிறது. அதனால் புஷ்பா 3 படம் கண்டிப்பாக வரும் என கூறியுள்ளார். இதனால் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    