துக்க நிகழ்வுகளில் வீடியோ அனுமதி மறுப்பு.. அதிரடி முடிவு எடுத்த தயாரிப்பாளர் சங்கம்
எல்லைமீறிய சிலர்
சமீபத்தில் விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் உலுக்கியது.
இவருடைய உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். இந்த சமயத்தில் சிலர் எல்லைமீறி நடந்துகொண்டதாக சமூக வலைத்தளத்தில் பேச்சு எழுந்தது.
இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரைத்துறையை சேர்ந்த பலரும் கோரிக்கை வைத்தனர்.
அனுமதி மறுப்பு
இந்நிலையில், அதற்கான நடவடிக்கையை தற்போது தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ளது.
இனிமேல் பிரபலங்கள் மற்றும் சினிமா துறையினரின் துக்க நிகழ்வுகளில் வீடியோ அனுமதி மறுப்பு. அப்படி எடுக்க வேண்டும் என்றால் காவல்துறை அனுமதி பெற்ற பிறகே வீடியோ எடுக்க அனுமதி என அறிவித்துள்ளனர்.
பிரபலங்கள்/ சினிமா துறையினரின் துக்க நிகழ்வுகளில் இனி வீடியோ அனுமதி மறுப்பு அல்லது காவல்துறை அனுமதி பெற்ற பிறகே வீடியோ எடுக்க அனுமதி (கோரிக்கை )
— Prakash Mahadevan (@PrakashMahadev) September 21, 2023
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் pic.twitter.com/9jqOyMSUpK

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
