கோப்ரா
நேற்று ரிலீஸ் ஆன கோப்ரா படத்திற்கு மோசமான விமர்சனங்கள் தான் வந்துகொண்டிருக்கிறது. விக்ரம் அதிக எண்ணிக்கையில் கெட்டப் போட்டிருக்கிறார் என படக்குழுவினர் விளம்பரப்படுத்தி இருந்த நிலையில் படத்தின் மீது எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆனால் தியேட்டர் போன ரசிகர்களுக்கு அதிகம் ஏமாற்றம் தான்.
படத்தின் நீளம் மிக அதிகமாக இருப்பதை பற்றி தான் பலரும் விமர்சித்தனர். இந்நிலையில் தற்போது 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறது என தயாரிப்பாளர் இயக்குனர் கூறியதாகவும், ஆனால் அவர் குறைக்கமுடியாது என சொல்லவிட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது நெகடிவ் விமர்சனம் வந்த பிறகு நீளத்தை குறைத்து இருக்கின்றனர்.
தயாரிப்பாளரை மதிக்கனும்
தற்போது பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் முகநூலில் கோப்ரா இயக்குனரை மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார்.
"தயாரிப்பாளர்களை முட்டாள் என நினைக்காதீர்கள், படத்தின் அவர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும். படம் தொடங்கியபிறகு தயாரிப்பாளர் சொல்வதை கேட்பது கூட இல்லை" என தனஞ்செயன் குறிப்பிட்டு இருக்கிறார்.
இருப்பினும் அந்த பதிவில் இயக்குனர் அஜய் ஞானமுத்து பெயரை அவர் குறிப்பிடவில்லை.


5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

மோடி இல்லாமல் 150 இடங்களில் கூட வெல்ல முடியாது - விவாதமாகும் எம்.பி. நிஷிகாந்த் துபேவின் பேச்சு! IBC Tamilnadu
