விஜய்யை பார்த்து தெலுங்கு சினிமா மாற வேண்டும்.. வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு ஓபன் டாக்
வாரிசு
கடந்த 2023ம் ஆண்டு விஜய் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படத்தை வம்சி இயக்க தில் ராஜு தயாரித்திருந்தார். தமன் இசையில் உருவான இப்படத்தில் சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு ஜெயசுதா, ஷாம், ஸ்ரீகாந்த், சங்கீதா, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக உலகளவில் ரூ. 290 கோடி வசூல் செய்தது. தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் தளபதி விஜய் இப்படத்திற்காக முதல் முறையாக இணைந்து பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தில் ராஜு ஓபன் டாக்
இந்த நிலையில், தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதில் "ஒரு மாதத்திற்கு 20 நாட்கள் என்கிற கணக்கில் 6 மாதங்களுக்கு 120 நாட்கள் கால்ஷீட் தந்தார் விஜய். அவர் ஒரு படத்தை 120 நாட்களில் முடிப்பதை போல அனைத்து நட்சத்திரங்களும் பின்பற்றினால், அது தயாரிப்பாளர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக இருக்கும். அவரது கண்டிப்பான அட்டவணை குழுவில் உள்ள அனைவருக்கும் அழுத்தத்தை ஏற்படுத்தும். அது ஒரு நல்ல விஷயம். தெலுங்கில், இப்போது யாரும் அப்படி ஒரு பழக்கத்தை பின்பற்றுவதில்லை. விஜய்யை பார்த்து தெலுங்கு சினிமா மாற வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
