வெந்து தணிந்தது காடு படத்திற்காக நடிகர் சிம்பு இத்தனை கிலோ குறைத்தாரா?
வெந்து தணிந்தது காடு
நடிகர் சிம்பு ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படம். கௌதம் மேனன்-சிம்பு-ஏ.ஆ.ர்.ரகுமான் என இவர்களது கூட்டணியில் இதுவரை வெளியான படங்கள் என்ன செய்தது என்பது நமக்கே தெரியும்.
தற்போது இந்த படம் என்ன மேஜிக் செய்ய இருக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் முத்து என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருக்கிறார்.
வரும் செப்டம்பர் 15ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

சிம்பு குறைத்த எடை
சிம்பு கொரோனா காலகட்டத்தை சரியாக பயன்படுத்தி தனது உடல் எடையை குறைத்து புதிய ஆளாக மாறினார். இந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் மிகவும் ஒல்லியாக காணப்படுகிறார்.
இப்படத்திற்காக மட்டும் அவர் 23 கிலோ உடல் எடையை சிம்பு குறைத்துள்ளதாக நேற்று (செப்டம்பர் 2) நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியுள்ளார்.