மாரடைப்பு காரணமாக மரணமடைந்த தயாரிப்பாளர்.. அதிர்ச்சியில் திரையுலகம்
தயாரிப்பாளர் ஜெயமுருகன்
தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் ஜெயமுருகன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை திரையுலகில் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளரும், இயக்குநருமானவர் ஜெயமுருகன். இவர் 1995ல் வெளிவந்த சிந்து பாத் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி, பின் ரோஜா மலரே படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார்.
இதுமட்டுமின்றி தான் இயக்கிய சில திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார். மேலும் சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மரணம்
இப்படி பன்முக திறமை கொண்ட ஜெயமுருகன் தனது இறுதி காலகட்டத்தை சொந்த ஊரான திருப்பூரில் கழித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஜெயமுருகனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட மரணமடைந்துள்ளார்.
இவருடைய மரணம் திரையுலகிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவருடைய இறுதி சடங்குகள் திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
