நீங்கள் செய்த விஷயம் எல்லாமே வெளியே வரும்.. ரச்சிதாவுக்கு மிரட்டல் விடுத்த தயாரிப்பாளர்!!
ரச்சிதா மகாலட்சுமி
JSK சதீஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள fire என்ற படத்தில் பாலாஜி முருதாஸ், ரச்சிதா மகாலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர்.
அண்மையில், பாலாஜி முருதாஸ் தனது சோசியல் மீடியா ப க்கத்தில், " இந்த படத்தில் நடித்ததற்காக சம்பளம் கிடைக்கவில்லை. சினிமாவை விட்டு விலக போகிறேன் என்று தெரிவித்திருந்தனர். இவரது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
பாலாஜி முருகதாஸ் பதிவை ரச்சிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, நான் இந்த ஏமாற்று இடத்திலிருந்து முன்பே வெளியே வந்துவிட்டேன். உங்களுக்கு இப்பொழுது தான் தெரிகிறது.
நீங்கள் படத்தின் தயாரிப்பாளர் இயக்குனராக இருக்கலாம் ஆனால், அதற்காக என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் தயாரிப்பாளராக இருக்க அருகதையற்றவர் என்று ரச்சிதா கூறியிருந்தார்.
மிரட்டல்..
இந்நிலையில் ரச்சிதாவின் குற்றச்சாட்டிற்கு எதிராக தயாரிப்பாளர் சதீஷ் தனது எக்ஸ் தளத்தில், வணக்கம் ரச்சிதா... நீங்க நடிச்சததான் உங்க birthday க் கு ... Glimpse ஆ ... போட்டிருக்கேன்... நடிக்காததை கிராபிக்ஸ் பண்ணி போடல... இன்னும் படம் வெளியில வரும்போது... நீங்க நடித்த காட்சிகள் எல்லாமே வெளியில வரும்... நீங்க சம்பளம் வாங்கிட்டுதான் நடிச்சிருக்கீங்க இனாமா நடிச்சு கொடுக்கல... அதுக்கு Agreement என்கைல இருக்கு... நீங்க பணம் வாங்கினதுக்கு ஆதாரமும் என் கைல இருக்கு...
அதனால... உங்கள நீங்களே தாழ்திக்காதீங்க... தேவைப்பட்டால் எல்லாத்தையும் நான் social media ல... போடுற மாதிரி ஆயிரும்... மதுரை வினையும்... Bigg Boss வி னையு ம் தன்னைச்சுடும்... குருவே சரணம் Fire திரைப்படத்தில் தாங்கள் நடித்ததை மறந்துவிட்டீர்கள்... அதே படத்தை 'Shit' என்று விமர்சனம் செய்துள்ளீர்கள்... அந்த 'Shit' இல்... நீங்களும் உள்ளீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் என்று சதீஸ் தெரிவித்துள்ளார்.
##firetamilmovie #fire வணக்கம் #ratchithamahalaxshmi ? pic.twitter.com/UlwibRoC1B
— JSK Satishkumar (@JSKfilmcorp) July 12, 2024

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
