புது வருஷ நாளில் மரணம்! மருத்துவமனையில் கிடந்த பரிதாபம்!

Death Kollywood Producer K Balu
By Balakumar Jan 02, 2021 03:20 PM GMT
Report

2021 புது வருசத்தின் மீது அனைத்து மக்களுக்கும் நல்ல நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் கூடியுள்ளது. காரணம் 2020 கொரோனாவிலேயே போய்விட்டது என்பதால் தான்.

சினிமாத்துறையும் பொங்கல் பண்டிகை முதல் வழக்கம் போல படங்களை வெளியிட அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளது. தற்போது இருக்கும் நிலை மாறி முழுமையாக வேலைகள் செய்யும் சூழ்நிலை வேண்டும் என சினிமாவை நம்பியிருக்கும் ஊழியர்கள் இருக்கிறார்கள்.

கடந்த வருடம் சினிமாவின் பலர் மரணித்தனர். இந்த வருடத்திலேயே கே.பி.ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் பாலு காலகியுள்ள செய்தி சினிமா வட்டாரத்தை அதிர்ச்சியாக்கியுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துமனை சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு சென்னையில் காலமாகியுள்ளார்.

அவரின் இறுதி சடங்கு இன்று சனிக்கிழமை பெசண்ட் நகர் மின் மயானத்தில் நடைபெற்றுள்ளது.

சின்னத்தம்பி, பாண்டித்துறை, பாஞ்சாலக்குறிச்சி உள்ளிட்ட 15 படங்களை தயாரித்த அவரின் மறைவுக்கு சரத்குமார், தனஞ்செயன் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US