அதற்காக போதைப்பொருள் பயன்படுத்துவார்களா?... ஸ்ரீகாந்த் குறித்து பிரபலம் காட்டம்
ஸ்ரீகாந்த்
ரோஜாக்கூட்டம் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக இருந்தார் நடிகர் ஸ்ரீகாந்த்.
சில ஹிட் படங்களில் நடித்துவந்த ஸ்ரீகாந்திற்கு சமீபகாலமாக எந்த ஒரு வெற்றிப்படமும் இல்லை என்றே கூறலாம். தற்போது இவர் படத்தை தாண்டி வேறொரு விஷயத்தால் அதிகம் பேசப்படும் நபராக மாறிவிட்டார்.
அதாவது தான் நடித்த படத்திற்காக பணம் வாங்குவதற்கு பதிலாக போதைப் பொருள் வாங்க அப்படியே அது பழக்கமாகிவிட்டதாக கைதான பிறகு போலீசில் கூறியிருக்கிறார் ஸ்ரீகாந்த்.
அவர் இப்போது கைதாகி இருக்க இந்த போதைப் பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவும் கைதாகியுள்ளார், ஆனால் அவர் பயன்படுத்தவில்லை.
தயாரிப்பாளர்
நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரம் குறித்து தயாரிப்பாளர் ராஜன் காட்டமாக பேசியுள்ளார். நடிகர்கள் படங்களை ஹிட்டாக கொடுக்கும் போது ஜாலியாக பார்ட்டி செய்ய ஆரம்பிப்பார்கள்.
படங்கள் தோல்வியடையும் போது விரக்தியில் குடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஒருசில நடிகர்கள் கேரவனிலேயே குடித்துவிட்டு நடிக்க வருவார்கள்.
ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் இந்த விஷயத்தில் சிக்கிவிட்டார்கள். ஒருவர் உங்களுக்கு சம்பளம் தராமல் அதற்கு பதிலாக போதை பொருளை கொடுத்தால் வாங்கலாமா? தூக்கிப்போட்டுவிட்டு காவல் துறையிடம் சென்றிருக்க வேண்டியதுதானே.
சம்பளம் பதிலாக போதைப்பொருள் கொடுத்தார் என அவர் சொல்வதெல்லாம் கதைதான் என கூறியுள்ளார்.