அஜித் செய்த அந்த செயலுக்காக கடும் மோசமாக விமர்சனம் செய்த ராஜன்- பரபரப்பான பேச்சு
நடிகர் அஜித்
நடிகர் அஜித் தொடர்ந்து வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் படங்கள் நடித்து வருகிறார். அடுத்து அவரது நடிப்பில் துணிவு என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது, படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.
இப்போதே படக்குழு மாஸான புரொமோஷன் வேலைகளை தொடங்கியுள்ளனர், எங்கு பார்த்தாலும் துணிவு படத்தின் போஸ்டர்கள், பேனர்கள் இருக்கின்றன.
அண்மையில் படத்தில் இடம்பெற்ற சில்லா சில்லா என்ற பாடல் வெளியாகி பட்டய கிளப்பியது.
நடிகர் பற்றி ராஜன்
தயாரிப்பாளர் ராஜன் சினிமாவில் நடக்கும் விஷயங்கள் பற்றி நிறைய பேட்டிகள் கொடுத்திருக்கிறார். முக்கியமாக பெரிய நடிகர்களின் பாக்ஸ் ஆபிஸ் குறித்து பேட்டிகள் கொடுத்திருக்கிறார்.
அண்மையில் ராஜன் அவர்களிடம் வட இந்திய தயாரிப்பாளருடனேயே அஜித் தொடர்ந்து படம் நடிக்கிறார், நீங்கள் தமிழ்நாட்டை கவனியுங்கள் என்று கூறி வருகிறீர்கள், இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், தமிழக மக்களை சந்தித்தால் அவரிடம் பேசுலாம். வீட்டில் இருந்து ஸ்டூடியோ, அங்கிருந்து வீடு என இருப்பவரிடம் என்ன பேச முடியும்.
எந்த உலகத்தை பற்றி கவலைப்படாமல் கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்த உனது ரசிகர்களை கூட மதிப்பதில்லை, அப்படிபட்ட நடிகர்கள் யாராக இருந்தாலும் நான் மதிப்பதில்லை என கொஞ்சம் மோசமாக பேசியுள்ளார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
