தயாரிப்பாளரில் இருந்து நடிகராக களமிறங்கும் ரவீந்தர்... அதுவும் இந்த நடிகர் படத்திலா?
ரவீந்தர்
தயாரிப்பாளர் ரவீந்தர், பல விஷயங்கள் மூலம் மக்களிடம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார்.
பிக்பாஸ், ஒரு நடிகை பற்றிய பேச்சு, பின் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்தது என இந்த விஷயங்கள் மூலம் அவரைப் பற்றி மக்கள் பேசி வந்தார்கள்.
அதோடு பல மாதங்களுக்கு முன்பு ரூ. 16 கோடி ரவீந்தர் ஏமாற்றியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அங்கு ஜெயிலில் நிறைய கஷ்டப்பட்டதாக அவரே பேட்டியில் கூறியிருந்தார்.
புதிய படம்
ஜெயிலில் இருந்து வெளியே வந்தபிறகு அவ்வளவாக ஆக்டீவாக இல்லாமல் இருக்கிறார் ரவீந்தர், அதாவது இன்ஸ்டாவில் எதுவும் பதிவிடுவது இல்லை.
இந்த நிலையில் தான் தயாரிப்பாளரில் இருந்து நடிகராக களமிறங்கி இருப்பதாக அவர் பதிவு போட்டுள்ளார். அதாவது அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் நடிக்கும் Dragon படத்தில் தான் ரவீந்தர் நடித்துள்ளாராம்.
இதோ அவர் போட்ட பதிவு,

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
