அப்பவே அஜித் தான் கிங்..விஜய் தயாரிப்பாளரே சொன்னது
தமிழ் திரையுலகில் டாப் ஹீரோக்கள் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்கள் நடிகர் அஜித் மற்றும் தளபதி விஜய்.
இவர்கள் இருவரும் இணைந்து கடந்த 1997ஆம் ஆண்டு வெளிவந்த ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்திருந்தனர்.
ஆனால், இவர்கள் இருவரும் தனி தனியாக நடித்த பல திரைப்படங்கள் ஒரே நாளில் வெளிவந்துள்ளது.
அப்படி கடந்த 2001ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் தீனா மற்றும் விஜய் நடிப்பில் பிரண்ட்ஸ் படமும் வெளிவந்தது.
இந்நிலையில், இதில் தீனா திரைப்படம் தமிழகத்தில் பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பி மாபெரும் வசூல் சாதனையை படைத்துள்ளது.
ஆனால், விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த பிரண்ட்ஸ் படம் தமிழக வசூலில் சரிவை சந்தித்தாக அப்படத்தின் தயாரிப்பாளர் அப்பச்சன் கூறியுள்ளார்.