அசோக் செல்வனுக்கு அசிங்கமே இல்லையா.. திட்டித் தீர்த்த தயாரிப்பாளர்கள்
அசோக் செல்வன்
சமீப காலத்தில் இயக்குனருக்கும் நடிகர்களுக்கும் இடையே நிறைய மனக்கசப்புகள் இருந்து வருகிறது. அந்த வகையில் போர் தொழில், ப்ளூ ஸ்டார் போன்ற அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த நடிகர் அசோக் செல்வன்.
இவர் இரண்டு முதல் மூன்று கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக உருவாகி வரும் அசோக் செல்வனின் எமக்குத் தொழில் ரொமான்ஸ் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை பாலாஜி கேசவன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.
திட்டித் தீர்த்த தயாரிப்பாளர்
இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் திருமலை, ப்ரோமோஷனுக்கு கூட அசோக் செல்வன் வராததை கண்டித்து பேசியிருந்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் திருமலை. நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை அவந்திகா இருவருமே இசை வெளியிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்காததால் அதனை குறித்து கண்டனத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துயிருக்கிறார்.
அதுமட்டும் இல்லாமல் டப்பிங் பேசுவதற்கு முன்பே அசோக் செல்வன் மீதமுள்ள தனது சம்பளத்தையும் கொடுக்குமாறு தனக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து தயாரிப்பாளர்கள் என்ன அடிமைகளா என்று கே. ராஜன் கேள்வி எழுப்பினர்.
மேலும் தயரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் இல்லை என்றால் நடிகர்கள் இல்லை என்றும் கூறியிருந்தார். இந்த பேச்சு பல்வேறு கருத்துக்களை வலைத்தளங்களில் எழுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
