மாஸ்டர் பட விசயத்தில் நீதிமன்றம் தடை உத்தரவு! சவாலான காரியம்! விடை கிடைக்குமா?
மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. டிக்கெட் புக்கிங்காக ரசிகர்கள் தியேட்டர் வாசல்களில் திரளாக கூடியுள்ளதை காண முடிகிறது.
ஏற்கனவே சட்ட விரோதமாக படங்களை இணையதளங்களில் வெளியாகி வருவதை தடுப்பது பெரும் சவாலாக இருக்கிறது. புதுப்படங்களை கேபிள் டிவியிலும் ஒளிபரப்பாகும் சம்பவம் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது. இது படதயாரிப்பாளர்களுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித், இணையம் மற்றும் கேபிள் டிவியில் வெளியிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் மாஸ்டர் படத்தை சட்டவிரோதமாக கேபிள் டிவியில் ஒளிபரப்ப கூடாது என்று தடை விதித்திருக்கிறார். மேலும், சட்ட விரோதமாக 400 இணையதளங்களிலும் மாஸ்டர் படத்தை வெளியிட நீதிபதி தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.