Project Hail Mary திரை விமர்சனம்

Report

இயக்குனர் பில் லார்ட் இயக்கத்தில் ரேயான் கோஸ்லிங் நடிப்பில் பிரமாண்டமாக வெளிவந்த ஸ்பேஷ் சயின்ஸ் பற்றி பேசும் இந்த ப்ராஜெக்ட் ஹைல் மேரி படம் எப்படி? பார்ப்போம்.

Project Hail Mary திரை விமர்சனம் | Project Hail Mary Movie Review

கதைக்களம்

படத்தின் நாயகன் ஒரு ஸ்கூலில் சயின்ஸ் டீச்சராக இருக்கிறார். இந்த நேரத்தில் சூரியனின் சர்பேஸ் பகுதியில் ஆஸ்ட்ரோபேஜ் என்ற மைக்ரோ ஆர்கனிசம் படர்கிறது.

இது கொஞ்சம் கொஞ்சமாக சூரிய சக்தியை உறிந்துக்கொண்டே செல்கிறது, இதை கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள் இப்படியே சென்றால் இன்னும் சில வருடத்தில் உலகமே அழியும் நிலை உருவாகிறது.

Project Hail Mary திரை விமர்சனம் | Project Hail Mary Movie Review

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விஞ்ஞானிகள் இருக்க, அப்போது தான் தெரிகிறது, அந்த மைக்ரோ ஆர்கனிசம் சூரியன் போல் பல நட்சத்திரங்கள் சக்தியை எடுத்துக்கொண்டே வர, ஒரு நட்சத்திரத்தை மட்டும் அது எதுவும் செய்யவில்லை.

அதை மட்டும் ஏன் ஒன்றும் செய்யவில்லை, அதை அறிந்து கொண்டால் பூமியின் அழிவை தடுக்கலாம், என ஒரு சிலரை அங்கு அனுப்பி வைக்க, அதில் விருப்பமே இல்லாத நாயகன் ரேயன் கோஸ்லிங்கையும் அனுப்புகின்றனர்.

Project Hail Mary திரை விமர்சனம் | Project Hail Mary Movie Review

அவர் விருப்பமே இல்லாமல் அங்கு சென்றாலும், ஸ்பேஷ்-ஆக எதிர்பாரத விதமாக ஒரு நட்பு கிடைக்க, அது என்னென்ன மாற்றத்தை உண்டாக்குகிறது என்பதே மீதிக்கதை. 

படத்தை பற்றிய அலசல்

நாயகன் ரேயன் கோஸ்லிங், ஒரு சயின்ஸ் டீச்சராக விருப்பமே இல்லாமல் ஒரு ப்ராஜெக்ட் சென்று, அங்கு அவருக்கு கிடைக்கும் நட்பு, காமெடி ஒன் லைனர் செண்டிமெண்ட் என தன் கதாபாத்திரத்தை தன் அனுபவ நடிப்பால் கோஸ்லிங் கலக்கியுள்ளார்.

படத்தின் மிகப்பெரிய பலமே ஹியுமர் தான், அங்கங்கு ஒன் லைன் காமெடியால் படம் முழுவதுமே நம்மை என்கேஜ் ஆக வைத்துள்ளனர், அதிலும் ராக்கி என்ற ஏலியன் கதாபாத்திரம் வந்தவுடன் படம் செம Wholesome மோட் செல்கிறது.

Project Hail Mary திரை விமர்சனம் | Project Hail Mary Movie Review

அந்த கதாபாத்திர வடிவமைப்பே அத்தனை அழகாக இருந்தது, இயக்குனர் அந்த கதாபாத்திரத்தை அனைவருக்குமே பிடிக்கும்படி எழுதிய விதம் படத்தின் மிகப்பெரிய பலம். ஆனால், படம் இதுவரை நாம் பார்த்த பல ஸ்பேஷ் சயின்ஸ் படங்களை நியாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை, அதிலும் ரெட்லி ஸ்காட் இயக்கிய The Martin, டென்னிஸ் இயக்கிய Arrival படத்தின் காட்சிகளை பல இடங்களில் நியாபகப்படுத்துகிறது.

இந்த படம் ஒரு கதைக்குள் அதாவது படத்தின் மையக்கருத்துக்குள் செல்லும் வரை பொறுமையை மிகவும் சோதிக்கிறது, அது படத்தின் பெரிய பலவீனம். தியேட்டரில் பார்ப்பவர் ஓகே, ஆனால், OTT ல் இந்த படத்தை பார்ப்பவர்கள் முதல் அரை மணி நேரத்தில் டயர்ட் ஆகி நிறுத்தும்படி பொறுமையை சோதிக்கிறது, இதை கடந்துவிட்டால் கண்டிப்பாக விருந்து தான்.

Project Hail Mary திரை விமர்சனம் | Project Hail Mary Movie Review

ஹாப்பி ராஜ் திரைவிமர்சனம்

ஹாப்பி ராஜ் திரைவிமர்சனம்

அதிலும் ராக்கி என்ற ஏலியனுடன் Communicate செய்யும் இடமெல்லாம் நம்மை அறியாமலையே சிறு புன்னகை வரும், ஏதோ நாம் அந்த ஏலியனுடன் பேசும் உணர்வை கடுத்துகின்றனர், அதிலும் ஆக்சிஜன் குறித்து சொல்லுமிடம், தங்கள் ஷிப்பில் வந்தவர்கள் இறந்து தான் தனியாக இருக்கிறேன் என சொல்ல, ஹீரோ நானும் தனியாக இருக்கிறேன் என சொல்ல, அதற்கு ஏலியன் நாம் என்று சொல்லுமிடம் அத்தனை அழகு.

டெக்னிக்கலாக ஒளிப்பதிவு, இசை குறிப்பாக சிஜி ஒர்க் எல்லாமே டாப் க்ளாஸ் தான், IMAX-ல் பார்ப்பவர்கள் கண்களுக்கு செம ட்ரீட்.

க்ளாப்ஸ்

நடிகர்கள் பங்களிப்பு

வசனங்கள்

ராக்கி என்ற ஏலியன் அதனுடன் பேசும் காட்சிகள்.

டெக்னிக்கல் ஒர்க்

பல்ப்ஸ்

கொஞ்சம் மெதுவாக நகரும் காட்சி அமைப்புக்கள், அதிலும் முதல் அரை மணி நேரம்.

பல ஸ்பேஸ் படங்களை பார்த்த நியாபகம்

மொத்தத்தில் இந்த Project Hail Mary ஒரு வெற்றிகரமான மனதை நெகிழ வைக்கும் ஒரு Project தான்.

Project Hail Mary திரை விமர்சனம் | Project Hail Mary Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US