இளையராஜா சர்ச்சை.. அப்பாவுக்கு பதிலடியாக யுவன் போட்டிருக்கும் பதிவு வைரல்
இசைஞானி இளையராஜா சமீபத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தார். பிரதமர் மோடியை அம்பேத்கர் உடன் ஒப்பிட்டு அவர் கூறியதற்கு தான் விமர்சனம் எழுந்தது. இளையராஜாவை திட்டி ட்விட்டரில் ஹாஸ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகின.
மோடி மற்றும் அம்பேத்கர் இடையே பல ஒற்றுமைகள் இருக்கிறது என கூறிய கருத்தை திரும்ப பெறமாட்டேன் என இளையராஜா உறுதியாக சொல்லிவிட்டார் என கங்கை அமரன் தெரிவித்து இருந்தார்.

யுவன் பதிவு
இந்த சர்ச்சைக்கு நடுவில் யுவன் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். "Dark Dravidian, Proud Tamizhan" என குறிப்பிட்டு அவர் ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
இளையாராஜா சொன்ன கருத்துக்கு எதிர் கருத்தாக தான் இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறாரோ என நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.
கர்பமாக இருக்கும் நடிகை பிரனிதா வெளியிட்ட நீச்சல் உடை போட்டோஸ்! இணையத்தில் வைரல்