அதிகாரபூர்வமாக பொன்னியின் செல்வன் முதல் நாள் வசூலை அறிவித்த லைக்கா நிறுவனம்! இவ்வளவு பாருங்க
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று பிரம்மாண்டமாக வெளியானது. எதிர்பார்த்தை விட பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தமிழகம் முழுவதும் பெரிய வரவேற்ப்பு கிடைத்திருக்கிறது.

தொடர்ந்து சிறந்த விமர்சனங்களை பெற்று வரும் பொன்னியின் செல்வன் இன்னும் ஒரு வாரத்திற்கு இப்படத்தின் முன்பதிவு நிறைவாக இருக்கிறது, அந்தளவிற்கு படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
முதல் நாள் வசூல்
இந்நிலையில் தற்போது இப்படத்தை தயாரித்துள்ள லைக்கா புரொடக்ஷன்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல்நாள் உலகளவிலான வசூல் குறித்து அறிவித்துள்ளது.
ஆம், அதன்படி இப்படம் முதல்நாளில் உலகம் முழுவதும் ரூ. 80+ கோடி வரை வசூலித்து இருப்பதாக அறிவித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் முதல் நாள் பிரமாண்ட தமிழக வசூல்
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu