தமிழ் சினிமாவை மாற்றப்போகிறது அஜித்தின் வலிமை- பிரபல இயக்குனர் ஓபன் டாக்

ajith valimai hvinodh psmithran
By Yathrika Jun 11, 2021 08:00 AM GMT
Report

அஜித்தின் 60வது படம் வலிமை. எந்த ஒரு பரபரப்பு விளம்பரம் இல்லாமல் படத்தின் பூஜையின் போதே பெயரும் சிம்பிளாக அறிவிக்கப்பட்டது.

அன்றிலிருந்து ரசிகர்கள் படத்தை காண ஆவலாக வெயிட்டிங். ஆனால் கொரோனா என்ற நோய் தொற்றால் பட வேலைகள் தள்ளிக்கொண்டே போனது. தற்போது ஒருவழியாக படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

டப்பிங்கையும் அஜித் முடித்துவிட்டார் என்கின்றனர், மே 1ம் தேதி பட ஃபஸ்ட் லுக் வெளியாக வேண்டியது. ஆனால் நோயால் மக்கள் பாதிக்கப்படும் போது கொண்டாட்டத்தில் நாம் இருப்பது சரியாக இருக்காது என பிளானை தள்ளி வைத்தார் அஜித்.

படக்குழுவினரின் அடுத்தகட்டம் என்ன என்பது தெரியாது.

இந்த நிலையில் இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ். மித்ரனிடம் ஓரு பேட்டியில் அஜித்தின் வலிமை படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், தமிழ் சினிமாவை இப்படம் மாற்ற இருக்கிறது, புதிய சாதனை படைக்க இருப்பதாக கூறியுள்ளார்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US