சைக் சித்தார்த்தா: திரை விமர்சனம்
ஸ்ரீ நந்து, யாமினி பாஸ்கர் நடிப்பில் வெளியாகியுள்ள சைக் சித்தார்த்தா தெலுங்கு திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா.

கதைக்களம்
சித்தார்த் (ஸ்ரீ நந்து) Event Management நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கிறார். அவரது காதலி திரிஷாவை தொழில் பார்ட்னருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். ஆனால், அவர்கள் இருவரும் ஒன்றாகி சித்தார்த்தை ஏமாற்றுகின்றனர்.
காதலியும் போய், தொழிலும் போனதால் விரக்தியடைந்த சித்தார்த், மதுவுக்கு அடிமையாகி பொறுப்பில்லாமல் முடங்கிக் கிடக்கிறார். என்றாலும், தனது தொழில் பார்ட்னர் மீது வழக்குப்போடுகிறார். அவரது நண்பர் ரேவந்தும் சித்தார்திற்காக பணத்தை இழந்ததால் மனைவிடம் திட்டு வாங்குகிறார்.

இந்த சூழலில் கணவனால் தினமும் சித்ரவதைக்கு ஆளாகும் ஷ்ரவ்யா (யாமினி பாஸ்கர்), விவாகரத்து பத்திரத்தை கொடுத்துவிட்டு அவருக்கு தெரியாமல் மகனை அழைத்துக் கொண்டு வெளியேறுகிறார்.
அவர் சித்தார்த் இருக்கும் குடியிருப்பு பகுதியில் அவரது கீழ் வீட்டில் குடியேறுகிறார். அதன் பின்னர் சித்தார்த், ஷ்ரவ்யா இருவரின் வாழ்க்கையில் என்னவெல்லாம் மாற்றங்கள் ஏற்பட்டது என்பதுதான் கலகலப்பான மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
வருண் ரெட்டி என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று கூறும் வாசகத்தையே காமெடியாக கூறி ஆரம்பிப்பதிலேயே, இந்தப் படத்தின் mode எப்படி இருக்கும் என்பதை கூறி விடுகிறார்.
அவ்வப்போது ஷேக் ஆகும் கேமரா, பின்னணி இசை, பார்வையாளர்களை நேராக பார்த்து பேசுவது என வித்தியாசமாக படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். சித்தார்த் கதாபாத்திரத்தில் ஸ்ரீ நந்து நல்ல நடிப்பை தந்துள்ளார்.
விரக்தியில் கத்தி அழுவது, மாணவரை அடிக்கப் போகும் ஆசிரியரை அடிப்பது என எல்லா எமோஷனையும் நன்றாக காட்டியுள்ளார். முதல் பாதியில் பல இடங்களில் அவர் நம்மை சிரிக்க வைக்க முயற்சித்தாலும், இரண்டாம் பாதியில்தான் நிறைய காமெடி ஒர்க்அவுட் ஆகிறது. ஷ்ரவ்யாவாக வரும் யாமினி பாஸ்கர் அட்டகாசமான நடிப்பை தந்துள்ளார்.

ஒவ்வொரு ப்ரேமிலும் அழகாக தெரிவதுடன் முகபாவனைகளில் தேர்ந்த நடிகை நான் என்று கூறுவதுபோல் நடித்துள்ளார். குறிப்பாக, கொடுமைப்படுத்தும் தனது கணவரை இன்னொருவர் அடிப்பதைப் பார்த்து, முதலில் அதிர்ச்சியடைந்து பின் அவனுக்கு இதுதேவை என்று சிரிக்கும் இடத்தில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
திரிஷா கதாபாத்திரத்தில் பிரியங்காவும் அபார நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ரேவந்தாக வரும் நரசிம்ஹா காமெடியில் மிரட்டியுள்ளார். ஆடையில்லாமல் அட்டை பெட்டியை அணிந்துகொண்டு அவரும் ஸ்ரீ நந்துவும் ஓடும் காட்சி அல்டிமேட் காமெடி.
டிஜே தில்லு சாயலில் இயக்குநர் வருண் ரெட்டி இப்படத்தை 18+ ஆக எடுத்திருப்பதால் குடும்பத்துடன் பார்க்க முடியாது. அதே சமயம் இளைஞர்கள் கொண்டாடலாம். அடல்ட் கன்டென்ட் விஷயங்களை தவிர்த்திருக்கலாம்.

எனினும் சிறுவயதில் பாதிப்பிற்கு உள்ளாகும் சிறுவன், திருமண வாழ்க்கையில் பெண் மீது வன்முறை போன்றவற்றை அழுத்தமாக பேசியதற்காக இயக்குநரை பாராட்டலாம். சமரன் சாயின் இசையும், பிரகாஷ் ரெட்டியின் கேமரா ஒர்க்கும், பிரதீக் நுடியின் எடிட்டிங்கும் சிறப்பு.
க்ளாப்ஸ்
ஸ்ரீ நந்து, யாமினி
திரைக்கதை
காமெடி
கிளைமேக்ஸ்
பல்ப்ஸ்
அடல்ட் கன்டென்ட்டை தவிர்த்திருந்தால் குடும்பத்துடன் பார்த்திருக்கலாம்
மொத்தத்தில் இந்த சைக் சித்தார்த்தாவை இளைஞர்கள் கொண்டாடலாம்.

Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan